சாலையில் கொட்டி கிடக்கும் வாக்குச் சீட்டுகள்! பொது மக்கள் அதிர்ச்சி!

சாலையில் கொட்டி கிடக்கும் வாக்குச் சீட்டுகள்! பொது மக்கள் அதிர்ச்சி!


vote sheet in road


பெரம்பலூர் அருகே சாலையோரம் வாக்களித்த வாக்குசீட்டுகள் சிதறி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்‌பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர்த்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் பெரம்பலூர் சாலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

vote

பெரம்பலூர் - அரியலூர் சாலையில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்து, வாக்குப்பெட்டியில் மக்கள் செலுத்திய இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகள்  சாலையில் கிடப்பது குறித்து அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சிதறிக் கிடந்த வாக்குச் சீட்டுகளை சேகரித்தனர். 

பொதுவாக தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் 6 மாதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தேர்தல் விதிமுறையாகும். ஆனால் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த மறுநாளே, வாக்குச் சீட்டுகளை சாலையில் கொட்டியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.