தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கிய ஒருவர் குணமடைந்தது எப்படி? என்ன மருந்து கொடுத்தார்கள்?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கிய ஒருவர் குணமடைந்தது எப்படி? என்ன மருந்து கொடுத்தார்கள்?



vijayabaskar talk about corona

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் தீவிரமாக பரவி உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 8228க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு,  தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் உலக அளவில் பரவாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறை பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பல நாடுகளில் இந்த கொடூர வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

corona

தமிழகத்தில் சமீபத்தில் இந்த நோய் தாக்கிய ஒருவர் குணமடைந்தது எப்படி என்று விஜயபாஸ்கலர் கூறினார். அதில், கொரோனா வைரஸ் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் ஆகியவற்றை குணப்படுத்துவதற்கான தனித்தனி மருந்துகள் கொடுத்தோம். கொரோனாவிற்கு புதிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என கூறினார்.

தமிழகத்தில் மருத்துவர்கள் செய்துவரும் ஆய்வில் நல்ல முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம், கொரோனா வைரசை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.