கொரோனாவை தடுப்பது சவால் என்பதை புரிந்துகொண்டு மக்கள் இதனை அவசியம் செய்யுங்கள்! அமைச்சர் விஜயபாஸ்கர்!



Vijayabaskar talk about corona

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல், தற்போது கொரோனா வைரஸால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் கொரோனா  வைரஸ் சோதனை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை ஆய்வு செய்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என்பது குறித்து  செய்தியாளர்களிடம் பேசினார்.

corona

தமிழக சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் பேசுகையில், 'தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை; கொரோனா பாதிப்பை தடுக்க மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.  நன்றாக கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும்.கொ

ரோனா எதிரொலி விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளை ஆய்வு செய்ய நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகிறது.  வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் உள்பட அனைத்து பயணிகளையும் சோதனை  நடத்துகிறோம். கொரோனாவால் யாரும் பீதியடையவேண்டாம்.

யாருக்கேனும் இருமல்,காய்ச்சல், மூச்சு திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச்  செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காற்றில் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் அதனை கட்டுப்படுத்துவது சவாலான ஒன்று என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எனவே பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.