# அதிர்ச்சி : விஜய் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யணும்....! வெடித்த அரசியல் கட்சிகளின் கண்டனம்! தமிழக அரசியலில் பரபரப்பு..!!!



trichy-gh-nursing-student-death-protest

திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை குறைபாடு காரணமாக நர்சிங் மாணவி உயிரிழந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி சீதாலட்சுமியின் மரணத்திற்கு நீதி கோரி, சக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோயம்புத்தூரில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் அடங்காத நிலையில், இந்த புதிய விவகாரம் மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! ஊருக்குள் அரிவாளுடன் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டிய கும்பல்..! பகீர் வீடியோ..!!!

“தவறான சிகிச்சையால் உயிரிழப்பு” குற்றச்சாட்டு

தகவலின்படி, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நர்சிங் மாணவி சீதாலட்சுமி, சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக உயிரிழந்ததாக குடும்பத்தினரும் சக மாணவிகளும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் திரண்ட மாணவிகள், சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மரணத்திற்கு முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மாணவிகள் தீவிர போராட்டம்

சீதாலட்சுமியின் மரணத்திற்கு நீதி கோரி, பலர் கைகளில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் எழுப்பிய கோஷங்களால் திருச்சி அரசு மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சிகளின் கண்டனம்

இதற்கிடையில், மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ சேவைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள திமுக மற்றும் பாஜக நிர்வாகிகள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் முதலமைச்சர் விஜய் அரசு தோல்வியடைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவங்களுக்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், முதல்வர் பதவியை விஜய் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக மற்றும் பஜாகவினர் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: நான்கு ஆண்டுகளாக நரக வேதனை அனுபவித்த மூத்த சகோதரிக்கு! டார்ச்சல் தாங்க முடியல.... நீதி கேட்ட இளைய சகோதரி! இறுதியில் உயிரைவிட்ட இரு சகோதரிகளும் ..!!!