திருநங்கைகள் உடலை சாக்கு பையில் கட்டி கிணற்றில் வீசிய பயங்கரம்! அதிர்ச்சி பின்னணி!transgender murdered in palayamkottai

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே திருநங்கைகள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 30க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு வசித்து வந்த பவானி என்பவரை கடந்த சில நாள்களாக காணவில்லை. பவானி அவருடன் பழகிய முருகன், அனுஷ்கா ஆகியோரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதால் அங்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால், அங்கு முருகனும், அனுஷ்காவும் இல்லை. 

ஆனால் அந்த வீட்டில் ரத்தக்கரை இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் இது குறித்து அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பவானி, அனுஷ்கா, முருகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டதாகவும், மகாராஜ நகரில் உள்ள ஒரு வீட்டில் அவர்களின் உடலை போட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

Transgender

அவர்கள் சொன்ன வீட்டிற்கு போலீஸார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு எந்த உடலும் இல்லை. இதனையடுத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அதில், 3 பேரின் உடல்களை சாக்குமூட்டையில் கட்டி 2 கிணற்றில் போட்டதாக கூறினார்.  அதன்படி போலீஸார் அப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது, இரண்டு கிணற்றிலும் சாக்கு மூட்டைகள் மிதந்துள்ளன. இதையடுத்து கிணற்றில் மிதந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ரிஷிகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.