தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
மக்களே ரெடியா.? 2-ஆம் தவணை ரூ.2,000 நிவாரணத் தொகை.! இன்று முதல் வீடு தேடி வரும் டோக்கன்.!

தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 15 முதல் 2-ஆம் கட்ட கொரோனா நிவாரணத் தொகை ரூ.2000 மற்றும் 14 வகையான இலவச மளிகைப் பொருள்கள் விநியோகம் தொடங்கவுள்ளது. அரிசி பெறும் குடும்ப அட்டை தாரா்கள் அனைவருக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதனையடுத்து அந்தந்த ரேஷன் கடைகளில் இதற்கான டோக்கன் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
இந்த டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது. நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் மளிகைப் பொருள் தொகுப்பு மற்றும் நிவாரண நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக காலை 8 முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்பட உள்ளன.
ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 200 பேர் வரை ரேஷன் கடைகளுக்கு வந்து கொரோனா நிவாரண தொகை மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை வாங்கிச் செல்லும் வகையில் டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளது. டோக்கனில் எந்த தேதி, நேரத்தில் ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்க வேண்டும் என்று எழுதி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கன் கிடைக்காதவர்கள், வெளியூர் சென்றுள்ளவர்கள் இந்த மாத இறுதி வரை தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண பொருட்களை ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கிச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.