தீபாவளியை முன்னிட்டு திடீரென குறையும் தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Today gold rate in chennai


Today gold rate in chennai

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது. சற்றும் எதிர்பாராத இந்த விலை ஏற்றதால் நடுத்தர மக்கள் பெரிதும் கவலை அடைந்தனர்.

இந்நிலையில் இந்த வாரம் தீபாவளி வருவதை ஒட்டி கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறைய தொடங்கியுள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,657 ஆக இருந்தது. இன்று 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கதின் விலை ரூ.3,647 க்கு விற்கப்படுகிறது.

gold rate

8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 29,256 ரூபாயிலிருந்து இன்று 29,176 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஒரு நாளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிக தங்கம் வாங்க வாய்ப்பிருந்தால் தங்கத்தின் விலை இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.