யாருக்கெல்லாம் கடன் தள்ளுபடி தெரியுமா..? இந்த தகுதி இருந்தால் மட்டுமே கடன் தள்ளுபடி..



TN lent cancelation policy

யாருக்கெல்லாம் கடன் தள்ளுபடி செல்லும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வங்கிக்கடன் ரத்துக்கான ரசீது வழங்கும் திட்டத்தை தமிழக முதலவர் இன்று தொடங்கிவைத்தார். அந்த அறிவிப்பில் வெளியான தகவலின்படி பட்டா, சிட்டாவுடன் குறிப்பிட்ட நிலத்தின் மீது விவசாயம் செய்வதற்காக நகைக் கடன் பெற்றிருந்தால் அதற்கான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 31-ம் தேதி வரையிலான குறுகிய கால பயிர்க்கடன், நகையீட்டின் பேரில் வழங்கப்பட்ட குறுகிய கால பயிர்க்கடனுக்கான அசல், வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

ஆனால் போலியான ஆவணங்கள், புனையப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட கடன் மற்றும் பினாமி கடன்கள் என நிரூபிக்கப்பட்டால் தள்ளுபடி பொருந்தாதும் என்றும் கூறப்பட்டுள்ளது.