
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. தம
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் வரும் திங்கட்கிழமை ஆலோசனை நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் மட்டும் நடைபெற்று இருந்த நிலையில், . 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் நடத்துவதை குறித்து வரும் திங்கள் கிழமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த உள்ளார்.
Advertisement
Advertisement