தமிழகம்

ரூ.20 ஆயிரம், செல்போனுடன் எஸ் ஆன டிரைவர்.. வீடுதேடி சென்று அடித்து நொறுக்கிய அதிபர் சன், பிரண்ட்ஸ்.!

Summary:

ரூ.20 ஆயிரம், செல்போனுடன் எஸ் ஆன டிரைவர்.. வீடுதேடி சென்று அடித்து நொறுக்கிய அதிபர் சன், பிரண்ட்ஸ்.!

வேலைக்கு சேர்ந்த இரண்டு நாட்களில் ரூ.20 ஆயிரம் பணம், செல்போனுடன் டிரைவர் மாயமாக, டிரைவரை லாரி ஓட்டுனரின் மகன், நண்பர்கள் கடத்தி சென்று அடித்து நொறுக்கிய சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், காரணம்பேட்டை பகுதியை சார்ந்தவர் சிவகுமார் (வயது 52). இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். மேலும், சொந்தமாக லாரி வைத்து, அதனை வாடகைக்கு விட்டும் வந்துள்ளார். 

காரணம்பேட்டை பகுதியை சார்ந்தவர் இராஜேந்திரன் (வயது 38). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிவகுமாரிடம் லாரி ஓட்டுநராக பணிக்கு சேர்ந்துள்ளார். நேற்று முன்தினம் லாரி ஓட்டுநர் இராஜேந்திரன், சிவகுமாரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கம், விலையுயர்த்த செல்போன் வாங்கிவிட்டு தலைமறைவாகியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து, சிவகுமாரின் மகன் அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 3 பேர், லாரி ஓட்டுநர் இராஜேந்திரனின் வீட்டிற்கு சென்று இராஜேந்திரனை கடத்தி சென்றுள்ளனர். அங்குள்ள வீடு அறையில் இராஜேந்திரனை கட்டிவைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அங்கிருந்து எப்படியோ தப்பித்த இராஜேந்திரன், பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியாகியுள்ளார். 

அவரது உடலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், இராஜேந்திரன் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் சிவகுமார், அவரது மகன் அருண்குமார், அருண்குமாரின் நண்பர்கள் குணசேகரன், சந்துரு உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் திருப்பூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 


Advertisement