#Breaking: கழுத்து எலும்பு உடைக்கப்பட்டு., +2 மாணவி வன்கொடுமை கொலை.. பிரேத பரிசோதனையில் ஷாக் தகவல்.!
+2 மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பிரேத பரிசோதனையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி வன்கொடுமை:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. மாணவியை வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. சந்தேகத்துக்குரிய வகையில் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த +2 மாணவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: #Breaking: விளாத்திகுளம் மாணவி வன்கொடுமை & கொலை விவகாரம்.. சிக்கலில் +2 மாணவர்.. பகீர் தகவல்.!
கழுத்து எலும்பு உடைக்கப்பட்டு கொலை:
இந்நிலையில், மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், முதற்கட்ட அறிக்கையின் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. முழு அளவிலான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். முதற்கட்ட பிரேத பரிசோதனையின் அறிக்கையில், மாணவியின் கழுத்து எலும்பு உடைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மாணவி உறவினர்களால் மீட்கப்பட்டபோதே உறவினர்கள் பாலியல் வன்கொடுமைகள் கீறல்கள், ஆடை களைந்த நிலை ஆகியவற்றை கூறி இருந்தனர்.

விரிவான அறிக்கையில் தகவல்:
காவல்துறையினர் தாமதமான விசாரணை காரணமாக மாணவிக்கு சோகம் நேர்ந்ததாகவும் கூறப்பட்டது. கழுத்து எலும்பு உடைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முழுமையான அறிக்கையில் மாணவிக்கு நேர்ந்தது தெரியவரும். இந்த அறிக்கை கிடைக்க 2 நாட்கள் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வன்கொடுமை தொடர்பான விபரத்தை அறிய தடயவியல் துறைக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படவுள்ளது. அவர்கள் கொடுக்கும் அறிக்கையை பொறுத்து, வழக்குக்கு வலுசேர்க்கும் ஆதாரமாக இருக்கும்.