கார் - டூவீலர் மோதி பயங்கரம்.. காவு வாங்கிய ஆபத்து வளைவு.. 3 இளைஞர்கள் துள்ளத்துடிக்க பலி.! 



Three Youths Killed in Car-Bike Collision at Dangerous Curve in Ramanathapuram

ஆபத்தான வளைவு பகுதியில் நடந்த விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.  

இருசக்கர வாகன பயணம்: 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை, மங்களேஸ்வரி நகரில் வருபவர் கணேசன், வசந்த், சஞ்சய். இவர்கள் மூவரும் மீனவர்கள் ஆவார்கள். சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் ஏர்வாடியில் இருந்து மாயகுளத்துக்கு சென்றுள்ளனர். 

இதையும் படிங்க: #BREAKING: பைக் திருட்டை தடுத்த இளைஞர் கொடூர கொலை.. சிவகங்கையில் பரபரப்பு.. மக்கள் போராட்டம்.!

accident

ஆபத்து வளைவு: 

புல்லந்தை, தச்சு ஊரணி ஆபத்தான வளைவில் வாகனம் திரும்பியது. அச்சமயம், ராமேஸ்வரத்தில் இருந்து சாயல்குடி நோக்கிச் சென்ற கார் மோதியதில், கணேசன் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட சஞ்சய், வசந்த் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

ஊரணி விலக்கு பகுதியில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாதது விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: தாத்தா, பேரன், பேத்தியின் உயிரைப்பறித்த கோர விபத்து.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.!