சும்மா இருந்தவனுக்கு வந்த சோதனையா இது? ரூ. 20 கொடுக்க முடியாது! எங்க அம்மாவையே திட்டுவியா? மதுகடை அருகே நடந்த கொடூ கொலை! திருச்சி சமயபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!!



samayapuram-liquor-shop-murder-broken-bottle

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் பட்டப்பகலில் கூலித்தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். மது வாங்குவதற்காக வந்திருந்த பிரகாஷ் (30) என்பவரை, ஏற்பட்ட தகராறில் உடைந்த மதுபாட்டிலால் கழுத்தில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக இருவரை சமயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

மது வாங்கியபோது ஏற்பட்ட தகராறு

லால்குடி வட்டம் மருதூர் மேலத்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பிரகாஷ், நேற்று மது வாங்குவதற்காக சமயபுரம் நால்ரோடு பகுதிக்கு வந்துள்ளார். அவர் சென்ற ஒரு கடையில் கேட்ட மது பிராண்ட் இல்லாததால், எதிரே இருந்த மற்றொரு மதுபானக் கடையில் வரிசையில் நின்று காத்திருந்தார்.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி நாளில் சோகம்... சிலையை கரைக்கச் சென்ற வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்!

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (21), மது வாங்குவதற்காக பிரகாஷிடம் ரூ.20 கேட்டதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்க பிரகாஷ் மறுத்ததுடன், பாலமுருகனின் தாயாரை ஆபாசமாக பேசியதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் அங்கிருந்து சென்று தனது நண்பர் முகேஷ் (26) என்பவரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

உடைந்த மதுபாட்டிலால் கொடூர தாக்குதல்

பின்னர் பாலமுருகனும் முகேஷும் இருசக்கர வாகனத்தில் மீண்டும் மதுபானக் கடை பகுதிக்கு வந்துள்ளனர். இருவரும் மது வாங்கிவிட்டு வெளியே வந்த பிரகாஷிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த உடைந்த குவாட்டர் பாட்டிலால் பிரகாஷின் வலது பக்க கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து முகேஷ் தனது இருசக்கர வாகனத்தில் பாலமுருகனை அழைத்துச் சென்று அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

CCTV காட்சிகள் மூலம் இருவர் கைது

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சமயபுரம் போலீசார், பிரகாஷின் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். பிரகாஷின் சகோதரர் ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது.

தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் CCTV காட்சிகள் உதவியுடன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. தலைமறைவாக இருந்த பாலமுருகன் மற்றும் முகேஷை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள மதுபானக் கடைகளைச் சுற்றி இதுவரை 4 கொலைகள் நடந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரித்து, குற்றச்செயல்களைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதையும் படிங்க: மருத்துவ படிப்புக்காக ஆசோயோடு ரஷ்யா சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடுமை! கண்ணீருடன் பேசும் மகனை பார்த்து கதறித் துடிக்கும் பெற்றோர்...! நெஞ்சை உலுக்கும் சோகம்...!!!