பழைய பதிவால் புதிதாக வெடித்த வெடிகுண்டு! விஜய் சேதுபதியின் மறைமுக பேச்சால் கடும் எதிர்ப்பு..!!!
மன்னிப்பு கேட்கணும்.. இல்லைன்னா நடக்குறது வேற! என்கிட்ட 40 வீடியோ ஆதாரம் இருக்கு... கட்சி நிர்வாகிகளை கதறவிட்ட தவெக வேட்பாளர் மோகன்..!!!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மோகன், சக நிர்வாகி மதனுடன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் சில நிர்வாகிகள் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டதாக அதில் மோகன் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பணிகளில் திட்டமிட்டுத் தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.
தனக்கு எதிராக கட்சி நிர்வாகிகளே செயல்பட்டதாக புகார்
முன்னாள் அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து தேர்தலில் களம் கண்டபோது, சொந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் தனக்கு ஆதரவாக செயல்படவில்லை என மோகன் தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே கட்சிக்காக உழைத்த தொண்டர்களை புறக்கணித்து, புதிதாக வந்தவர்களிடம் சிலர் பணம் பெற்றுக்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்.. விஜய் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு.!
மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன், ஒட்டன்சத்திரம் நகரச் செயலாளர் அருண், ஒன்றியச் செயலாளர் சுறா சுரேஷ், தொப்பம்பட்டி மத்திய ஒன்றிய நிர்வாகி ஜின்னா உள்ளிட்டோர் எதிர்த்தரப்புடன் தொடர்பு வைத்து தேர்தல் பணிகளை புறக்கணித்ததாக மோகன் ஆடியோவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. கட்சி அலுவலகத்துக்கான வீடு, ஃபர்னிச்சர் உள்ளிட்ட ஏற்பாடுகளிலும் மறைமுகமாக பணப் பரிவர்த்தனை நடந்ததற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
40-க்கும் மேற்பட்ட வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக தகவல்
மேலும், கட்சியின் நிலையை வெளிப்படுத்தும் வகையில் வீடியோ ஆதாரங்கள் மற்றும் தனி ஆவணக் கோப்புகளைத் தயாராக வைத்திருப்பதாக மோகன் தெரிவித்துள்ளார். நிர்வாகிகளின் பணப் பரிவர்த்தனை தொடர்பான பேச்சுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அதில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கட்சித் தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆகியோரின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆதாரங்களை வெளியிடுவதாக மோகன் எச்சரிக்கை
தன்னை எதிர்த்து செயல்பட்டதாகக் கூறப்படும் நிர்வாகிகள் ஓரிரு நாட்களுக்குள் நேரில் வந்து விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என மோகன் ஆடியோவில் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இல்லையெனில் தன்னிடம் உள்ள ஆவண ஆதாரங்கள் மற்றும் வீடியோக்களை கட்சித் தலைமைக்கும் ஊடகங்களுக்கும் வெளியிடுவதாக அவர் எச்சரித்துள்ளார். ஒட்டன்சத்திரம் தொகுதி தவெக வேட்பாளராக இருந்தவரே கட்சி நிர்வாகிகள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது, திண்டுக்கல் மாவட்ட தவெக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.