ஐயோ... ஒரு நொடியில் உயிர் தப்பினாரா? நடிகர் கிரண் ராஜை கீழே தள்ளிய சிங்கம்! அதிர்ச்சி வீடியோ..!!!
சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்.. விஜய் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு.!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் தவெக வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.
இருவரும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்எல்ஏக்கள். பின்னர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்கள் போட்டியிட்ட அதே தொகுதிகளில் மீண்டும் தவெக சார்பில் களம் காண உள்ளனர்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9, 2026 அன்று நடைபெறும். வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 17-ம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 19 ஆகும்.
இதையும் படிங்க: தவெக கூட்டணி பெயரில் நடந்த மாற்றம்… பின்னணியில் திருமாவளவன்.. விசிக நிர்வாகி பரபரப்பு பதிவு!
தமிழகத்தில் மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருந்தாலும், தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவற்றுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், தவெக தலைமையில் புதிய கூட்டணியும் அதிகாரப்பூர்வமாக உருவாகியுள்ளது. “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என பெயரிடப்பட்டுள்ள இந்த அணியில் தவெக, காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் ஐயூஎம்எல்ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியின் தலைவராக முதல்வர் விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த கூட்டணியின் சார்பிலேயே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என விஜய் அறிவித்துள்ளார். இரு தொகுதிகளிலும் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. திமுக ஏற்கனவே மதுராந்தகத்தில் இ.பரந்தாமனையும், தாராபுரத்தில் எஸ்.சுகன்யாவையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
மறுபுறம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளும் முன்னதாக அதிமுக வசம் இருந்த நிலையில், தற்போது அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏக்களையே தவெக மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. மேலும், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு, பாஜக முழு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதனால் தவெக கூட்டணி – திமுக – அதிமுக கூட்டணி இடையிலான போட்டி இரு தொகுதிகளிலும் முக்கிய அரசியல் மோதலாக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களை மீண்டும் அதே தொகுதிகளில் களமிறக்கியிருப்பதன் மூலம், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தவெகவின் ஆட்சி மற்றும் அதன் புதிய கூட்டணி அமைப்புக்கு முக்கியமான அரசியல் சோதனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் தலைமையில் புதிய கூட்டணி உதயம்! புதிய பெயர்... புதிய அரசியல் கணக்கு!