#BREAKING: பைக் திருட்டை தடுத்த இளைஞர் கொடூர கொலை.. சிவகங்கையில் பரபரப்பு.. மக்கள் போராட்டம்.!
இருசக்கர வாகன திருட்டை தடுத்த 24 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
திருட்டை தடுக்க முயற்சி:
Sivagangai Vivek Murder: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம், தட்டான்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் விவேக் (வயது 24). சம்பவத்தன்று அங்குள்ள பகுதியில் கும்பல் ஒன்று இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்துள்ளது. இதனைக்கண்ட விவேக் அதனை தட்டிக்கேட்டு, பொதுமக்கள் உதவியுடன் நபரை பிடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: #Breaking: தென்காசியில் அரசு வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிப்படுகொலை.. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.!
கொடூர கொலை:
பின் அவர்களை காவல் நிலையத்திலும் ஒப்படைத்த நிலையில், விவேக்கை நேற்று இரவில் ஒருகும்பல் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது. விவேக்கின் நண்பரையும் அந்த கும்பல் தாக்கிய நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மக்கள் போராட்டம்:
தற்போது இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கொலை சம்பவத்தை கண்டித்து விவேக்கின் உறவினர்கள் இன்று காலை மதுரை - ராமநாதபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மரணம்.. கோவை மருத்துவமனையில் சோகம்.!