Video : குஷ்பூவின் மகள் திருமணத்தில் நடிகை திரிஷா! வேறு யாரெல்லாம் வந்திருக்காங்க தெரியுமா..?
அடுத்தடுத்து அதிரடி காட்டுங்க... தவெக அரசின் டார்கெட்டில் இருக்கும் அடுத்த லிஸ்ட்! ஆதரித்து அண்ணாமலை போட்ட ட்வீட்டால் அதிரும் தமிழக அரசியல்...!!!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, கடந்த ஆட்சிக் காலத்தில் எழுந்ததாகக் கூறப்படும் பிற ஊழல் புகார்களிலும் விரைவான விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சோதனையை வரவேற்ற அண்ணாமலை
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, கடந்த ஆட்சிக் காலத்தில் சாலை ஒப்பந்தங்கள் தொடர்பாக எழுந்த முறைகேடு புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்று தெரிவித்துள்ளார். மேலும், விசாரணைகள் சட்டப்படி விரைவாக நிறைவு பெற்று, குற்றம் நிரூபிக்கப்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவில் அடுத்தடுத்து விழும் அடி.. சென்னை டூ தி.மலை. எ.வ.வேலுவை வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.! அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!
மேலும் பல வழக்குகளை விசாரிக்க கோரிக்கை
அதேபோல், விதிமீறி ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பி.ஜி.ஆர். எனர்ஜி விவகாரம், ஆவின் நிறுவனத்தைத் தவிர்த்து கூடுதல் விலைக்கு ஹெல்த் மிக்ஸ் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஊட்டச்சத்து பெட்டகம் விவகாரம் மற்றும் பொங்கல் வேட்டி கொள்முதல் தொடர்பான புகார்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளிலும் உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மாநில போக்குவரத்துத் துறை, தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்பாகவும் நடவடிக்கை தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் விசாரணை கோரிக்கை
உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றமும், நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனமும் ஒரே முகவரியில் செயல்படுவது தொடர்பாகவும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்திற்குப் பிறகு அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு அறிவித்தது தொடர்பாகவும் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த விவகாரங்களிலும் அண்ணாமலை தனது பதிவின் மூலம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: வேலையே செய்யாமல் ரூ.3.23 கோடி அவுட்". எ.வ.வேலு வீட்டில் DVAC ரெய்டு.. பின்னணியில் இருந்த 'அந்த' 4 பக்க கடிதம். தமிழகத்தையே உலுக்கும் ஊழல்..!