Video : குஷ்பூவின் மகள் திருமணத்தில் நடிகை திரிஷா! வேறு யாரெல்லாம் வந்திருக்காங்க தெரியுமா..?
இந்தியாவில் ₹40 ஆயிரம் சம்பளம்.. ஆனா சுவிட்சர்லாந்தில் ₹7 லட்சம்.! சம்பளத்தையும் செலவையும் பிரித்து காட்டிய தம்பதி..! இறுதியில் சூடு பிடித்த வேற விவாதம்... வீடியோ செம வைரல்..!!!
வெளிநாடுகளில் கிடைக்கும் அதிக சம்பளம் உண்மையில் அதிக சேமிப்பாக மாறுகிறதா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்தின் மாத வருமானம், வாழ்க்கைச் செலவு ஆகியவற்றை ஒப்பிட்ட இன்ஸ்டாகிராம் தம்பதியின் சுவிட்சர்லாந்து வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
₹40 ஆயிரம் சம்பளம் vs ₹7 லட்சம் சம்பளம்
இன்ஸ்டாகிராமில் '@clogsandcurries' என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், இந்தியாவில் மாதம் ₹40,000 சம்பளம் பெறும் ஒருவரின் வாழ்க்கைச் செலவும், சுவிட்சர்லாந்தில் மாதம் ₹7,00,000 சம்பளம் பெறும் ஒருவரின் செலவுகளும் ஒப்பிடப்பட்டுள்ளன. அதிக சம்பளம் கிடைத்தாலும், அந்நாட்டின் அன்றாட செலவுகளும் அதே அளவில் உயர்ந்திருப்பதை அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளனர்.
வாடகை முதல் குழந்தை பராமரிப்பு வரை
வீடியோவில் ஷான்டல் இந்தியாவின் பட்ஜெட் விவரங்களையும், குரு சுவிட்சர்லாந்தின் செலவுகளையும் பகிர்ந்துள்ளனர். இந்தியாவில் ஒரு வீட்டின் மாத வாடகை சுமார் ₹20,000 என்றால், அதே தரத்தில் உள்ள வீட்டிற்கு சுவிட்சர்லாந்தில் ₹2,00,000 வரை செலவாகும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் மளிகைப் பொருட்கள், மருத்துவக் காப்பீடு, பொதுப் போக்குவரத்து ஆகியவற்றின் செலவுகளும் அதிகமாக இருப்பதாக விளக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் குழந்தை பராமரிப்புக்காக சுமார் ₹5,000 செலவாகும் நிலையில், சுவிட்சர்லாந்தில் அது ₹1,50,000 வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெட்டிசன்களின் கேள்வியால் தொடரும் விவாதம்
இந்த ஒப்பீட்டை பார்த்த பலரும், இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்தை பொருளாதார அடிப்படையில் மட்டுமே ஒப்பிடாமல், சாலைகளின் தரம், காற்றின் தரம், சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு போன்ற அம்சங்களையும் சேர்த்து பார்க்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கு பதிலளித்த தம்பதியினர், அந்த அம்சங்கள் குறித்து தனியாக அடுத்த வீடியோவில் பேசவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் இந்த விவாதம் சமூக வலைதளங்களில் மேலும் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: என்ன நடந்தாலும் பரவாயில்லை.... மருத்துவமனையில் தலையில் கட்டு, முகத்தில் காயத்துடன் பெண் செய்த காரியத்தை பாருங்க! கொந்தளிக்கும் இணையவாசிகள்!!!