#Breaking: விளாத்திகுளம் மாணவி வன்கொடுமை & கொலை விவகாரம்.. சிக்கலில் +2 மாணவர்.. பகீர் தகவல்.!
விளாத்திகுளத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மாணவர் ஒருவரிடம் விசாரணை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
மாணவி பாலியல் வன்கொடுமை & கொலை:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வந்த 17 வயதுடைய மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி, மறுநாள் மதிய வேளையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான அடையாளம் இருந்ததால் மாணவியின் மரணம் வழக்கு மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க: 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பயங்கரம்.. 24 வயது இளைஞரின் குலைநடுங்க வைக்கும் செயல்.!
+2 மாணவரிடம் விசாரணை:
குற்றவாளியை பிடிக்க காவல்துறையினர் 10 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அங்குள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த +2 மாணவர் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் வடமாநில தொழிலாளர்கள் 10 பேரிடமும் தனியாக விசாரணை நடைபெற்று இருந்த நிலையில், தற்போது பள்ளி மாணவர் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என ஊர்மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
இதையும் படிங்க: காட்டுக்குள் மலம் கழிக்க சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி! உடல் துண்டு துண்டாகக் வெட்டப்பட்ட நிலையில் ..... தூத்துக்குடி அருகே நடந்த கொடூரம்!!!