தனியார்மயம்? தமிழக அரசின் பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் அறிவிப்பு என்ன? எகிறும் எதிர்பார்ப்பு.! 



Tamil Nadu Budget 2026: Will TASMAC Be Privatized? Two Major Announcements Expected

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான முதல் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

எதிர்பார்ப்பு: 

தமிழ்நாடு அரசு முதலமைச்சர் விஜயின் தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் கீழ் செயல்பட்டு வருகிறது. தவெக தமிழ்நாடு அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 05 ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுதொடர்பான எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அரசு சார்பில் எந்தெந்த சலுகை வரும், அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: இன்பச் செய்தி! மகளிர் உரிமைத்தொகை உயர்வு..? முதல்வர் ஸ்டாலினின் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு!

2 அறிவிப்புகள்: 

இதுதொடர்பாக முதல்வர் விஜயும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் அவசரம் மட்டுமின்றி ஆராய்ந்து நிறைவேற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மேல் சபை: 

சட்டப்பேரவையின் மீள்சபையில் அரசியல்வாதிகள் இல்லாமல் ஆசிரியர்கள், மருத்துவர்கள், கலைஞர்கள், வல்லுநர்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1986 ம் ஆண்டு ஒருசில காரணங்களால் ரத்து செய்யப்பட்ட மேல் சபை மீண்டும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் மேல் சபை ரத்தானது குறிப்பிடத்தக்கது. 

TN politics

டாஸ்மாக்: 

அதேபோல, டாஸ்மாக் நிர்வாகத்தை தனியார் வசப்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது. மேல் சபையை பொறுத்தமட்டில் சட்டமசோதா தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டாலும், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் இரண்டு அவையிலும் வெற்றிபெறவேண்டும் என்ற நிலை உள்ளது. மதுவை அரசே விற்பனை செய்து அவப்பெயர் வரும் இலையில், அதனை மாற்ற முயற்சிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை 2,500 எப்போது? CM விஜய் பிறந்தநாளில் எதிர்பார்த்த மக்கள்... வெளியான முக்கிய தகவல்..!!!