கள்ளக்காதல் சந்தேகம்.. மனைவி, மாமியார் வெட்டிக்கொலை.. பள்ளி வாசலில் நடந்த பயங்கரம்.!
கள்ளத்தொடர்பு காரணமாக மனைவி, மாமியாரை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
காதல் திருமணம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் செல்லமுத்து (வயது 34). இவர் வெளிநாட்டில் கூலிவேலை செய்து வருகிறார். ரமந்தபுரம் காட்டுப்பிள்ளையார்கோயில் தெருவில் வசித்து வருபவர் ஷர்மிளா தாகூர் (வயது 31). இவர்கள் இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர்.
இதையும் படிங்க: ரத்தக்கறை படிந்த சுத்தியலுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்த நபர்.. கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடூரம்.!
குடும்ப பிரச்சனை:
இதனிடையே, தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகன், மகள் இருக்கும் நிலையில், கடந்த 8 மாதங்களாக ஷர்மிளாவின் நடத்தையில் செல்லமுத்து சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த விவகாரம் காவல் நிலையம் சென்றதால், செல்லமுத்து சிறைக்குச் சென்று பின் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
பிரிந்து வாழ்கிறார்கள்:
இதனால் இருவரும் கடந்த 7 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஷர்மிளா அங்குள்ள வைகை நகரில் மகளுடன் இருக்கிறார். மகன் செல்லமுத்துவின் வீட்டில் இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒருகட்டத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்திலும் விண்ணப்பித்துள்ளனர். ஷர்மிளாவின் தந்தை முனியசாமி இறந்தபின், தாய் பத்மாவதி துபாய்க்கு சென்று பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் சொந்த ஊர் வந்தார்.
கண்காணிப்பு:
இதனிடையே, ஷர்மிளாவுக்கும் - வேறொரு நபருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி எழுந்த சந்தேகம், செல்லமுத்துவுக்கு மேலும் அதிகரித்துள்ளது. சில நாட்களாகவே மனைவியை கண்காணித்து வந்தவர், நேரு காலை மகள், பேத்தியை பார்க்க பத்மாவதி நேரில் வந்தார். பின் மகள், தாயை அழைத்துக்கொண்டு ஷர்மிளா மகளின் பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு செல்லமுத்து ஷர்மிளாவுடன் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்.
கொலை:
இருவருக்கும் இடையே அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், செல்லமுத்து மனைவியை அரிவாளால் வெட்டி இருக்கிறார். இதனை தடுக்க முயன்ற பத்மாவதிக்கும் வெட்டுக்காயம் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். செல்லமுத்து கேணிக்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஜாமின்ல ஏன் எடுக்கல? சிறைக்கு சென்றுவந்த உடனே மனைவி கொலை.. சிவகங்கையில் பகீர் சம்பவம்.!