பொண்ணுங்களுக்கு தான் ஆபத்துன்னா இப்போ ஆண்களுக்குமா? 8 வயது சிறுவனை விளையாட கூட்டிட்டு போய் 2 வாலிபர்கள் செய்த கொடூரம்! வலி தாங்க முடியாமல் தாயிடம் கதறி அழுத மகன்.! பகீர் சம்பவம்..!!!
ஆந்திர மாநிலம் பல்லநாடு மாவட்டத்தில் 8 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முப்பல்லா மண்டலத்துக்குட்பட்ட சாகண்டபாலெம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சிறுவனை வெளியே விளையாட வருமாறு அழைத்துச் சென்ற இருவர், அவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட அழைத்துச் சென்ற இருவர்
சாகண்டபாலெம் கிராமத்தில் 8 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரு வாலிபர்கள் அவனை வெளியே விளையாட வருமாறு கூறி அழைத்துச் சென்றதாக தெரிகிறது. சிறுவனை தனியாக அழைத்துச் சென்ற அவர்கள், அங்கு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடி ஆத்தீ.. வயலில் புல் வெட்டிய விவசாயியின் கை, கழுத்தை சுற்றி இறுக்கி கொண்ட ராட்சத மலைப்பாம்பு..! உயிருக்கு போராடிய நிலை... அதிர்ச்சி காட்சி!!!
தாயிடம் நடந்ததை கூறிய சிறுவன்
பின்னர் வீட்டுக்கு திரும்பிய சிறுவன், நடந்ததை தனது தாயிடம் கூறி அழுதுள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற போலீசார், குற்றச்சாட்டுக்குள்ளான இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஷோரூம் வாசலில் குடித்துவிட்டு பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்ட கும்பல்! எல்லை மீறி செய்த அட்டூழியம்...! பகீர் வீடியோ..!!!