அரசியல் தமிழகம்

பரபரப்பான அரசியல் சூழலில் விரைவில் வருகிறது இடைத்தேர்தல்! வெல்லப்போவது யார்?

Summary:

Thiruvarur by election date announced

கலைஞர் இல்லாத திமுக, ஜெயலலிதா இல்லாத அதிமுக. இரண்டு எதிர் எதிர் துருவங்களும் சந்திக்கும் முதல் இடைத்தேர்தல். பரபரப்பான அரசியல் சூழலில் வரும் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் உடல்நல குறைவால் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மரணமடைந்தார். இந்நிலையில் திருவாரூர் தொகுதி MLA வாக இருந்த கருணாநிதி அவர்கள் மரணமடைந்ததை அடுத்து திருவாரூர் தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இன்னும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.

அதன்பேரில் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும். ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

மேலும் ஜனவரி 3 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும், ஜனவரி 11 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மேலும் ஜனவரி 14 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசிநாள். ஜனவரி 28 வாக்கு பதிவு, ஜனவரி 31 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Advertisement