டிராக்டர் ஓட்ட ஆசைப்பட்ட மனைவி.. கற்றுத் தரும்போது டிராக்டர் கவிழ்ந்து கணவன் மனைவி இருவரும் பலியான சம்பவம்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் சிவகுமார் - கீதா தம்பதியினர். இவர்கள் தங்களது விவசாய நிலத்தில் பயிர்களை பயிர் செய்து அறுவடை செய்து வந்துள்ளனர். அதற்காக நிலத்தை உழுவதற்காக டிராக்டரை பயன்படுத்தி வந்துள்ளனர்.
அப்போது சிவகுமாரின் மனைவி கீதா டிராக்டர் ஓட்ட வேண்டும் என ஆசை பட்டு தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு சிவகுமார் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மனைவி கீதாவுக்கு டிராக்டர் ஓட்ட கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் திடீரென தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்களானது.
இந்த விபத்தில் டிராக்டரின் அடியில் சிக்கி கணவர் சிவக்குமார் மற்றும் மனைவி கீதா ஆகிய இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதனையடுத்து இந்த சம்பவத்தை நேரில் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தகவலின் அறிந்து அங்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசையாய் கேட்ட தனது மனைவிக்கு டிராக்டர் ஓட்ட கற்றுத்தரும்போது டிராக்டர் கவிழ்ந்து தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது