ஃபுல் மப்பில் போதை ஆசாமி செய்த விபரீத செயல்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. போலீஸ் தீவிர விசாரணை..!The heinous act of the drug addict in Full Mup.. The family is in shock.. The police are actively investigating..!

பெரம்பலூர் மாவட்டம் பாளையம் நடுத்தெருவில் வசித்து வருபவர்கள் கமலக்கண்ணு - பாப்பாத்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கமலக்கண்ணு மது போதைக்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

மேலும் சம்பவத்தன்று கமலக்கண்ணு அளவுக்கு அதிகமாக குடித்து தலைக்கேரிய போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் போதையில் கமலக்கண்ணு செய்வதறியாது தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

drug addict

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கமலக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.