
காஞ்சீபுரம் மாவட்டம் ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு என்பவரின் மகன் தர்ஷித். 7 வயது ந
காஞ்சீபுரம் மாவட்டம் ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு என்பவரின் மகன் தர்ஷித். 7 வயது நிரம்பிய தர்ஷித் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில், கடந்த 16-ந்தேதி, பக்கத்து கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளான்.
இந்தநிலையில், பாட்டி வீட்டின் அருகில் உள்ள ஒரு வயல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த தர்ஷித் தன்னை ஏதோ கடிப்பது போன்று உள்ளதை உணர்ந்து அதை விரட்டி சென்று அடித்துள்ளான். அப்போதுதான் அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என்று தெரியவந்துள்ளது.
பின்னர் அந்த பாம்பை கையில் எடுத்துக்கொண்டு, பெற்றோரின் உதவியுடன் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளான். இதனையடுத்து அந்த சிறுவனுக்கு விஷமுறிவுக்கான சிகிச்சை அளித்து சிறுவனை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையின் போது மருத்துவர்கள் பாம்பை எதற்கு கையில் கொண்டு வந்தாய்? என கேட்டுள்ளனர். அதற்கு, ‘நான் பாம்பை கையில் கொண்டு வந்தால் தானே, உங்களுக்கு சிகிச்சை அளிக்க எளிதாக இருக்கும் என்று சிறுவன் பதில் அளித்துள்ளான். சிறுவன் அளித்த பதில் மருத்துவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement