கள்ளக்காதலால் சிதைந்துபோன குடும்பம்.. லீக்கான வீடியோவால் பிடித்த தீ.. காரசார விவாதம்.! தமிழகத்தில் அப்படி என்ன நடந்தது?



Thanjavur Pattukottai Affair Case Video Leaked

கள்ளக்காதல் உறவில் இருந்த மனைவியை கொலை செய்ய முயற்சித்த நபர், மகனையும் கொலை செய்ய முயற்சித்த அதிர்ச்சி சம்பவம் பட்டுக்கோட்டையில் நடந்துள்ளது.

தனியார் நிறுவன ஊழியர் & அழகுக்கலை நிபுணர்:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் தர்மராஜ். இவரின் மனைவி அட்சயா. சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் தர்மராஜ் வேலை பார்த்து வரும் நிலையில், அட்சயா அழகுக்கலை நிபுணராக இருந்து வருகிறார். தம்பதிகளுக்கு 5 வயதுடைய மகன் இருக்கிறார். தர்மராஜ் பணியில் இருப்பதால், விடுமுறை கிடைக்கும்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!

கள்ளக்காதல்:

இதனிடையே, அட்சயாவுக்கு சலூன் கடை வைத்துள்ள ஜோஸ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவரும் நெருங்கி பழகி கள்ளக்காதல் மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது. கணவரும் வெளியூரில் இருப்பதால் அட்சயா ஜோஸுடன் நெருங்கி பழகி ஊரைச் சுற்றி வந்துள்ளார். ஒருமுறை தர்மராஜ் சொந்த ஊர் வந்தபோது அட்சயாவின் செல்போனில் இருந்த தகவலை பார்த்து கேட்டு இருக்கிறார்.

Crime news

மகனை பராமரித்தார்:

முதலில் மனைவி சமாளித்த நிலையில், பின் உண்மை அம்பலமானது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படத் தொடங்கி இருக்கிறது. ஒருகட்டத்தில் தம்பதிகள் இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படும் நிலையில், 5 வயது மகனை தர்மராஜ் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுவனின் எதிர்காலம் கருதி இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படும் நிலையில், பின் மீண்டும் ஜோஸுடன் அட்சயா தனியாக சென்று வந்துள்ளார்.

கொலை முயற்சி:

ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த தர்மராஜ், மனைவியை கையும் களவுமாக பிடித்து அதனை வீடியோ எடுத்து இருக்கிறார். மேலும், வீட்டில் இருந்த ஜோஸையும் வெளியே அழைத்து அவர் பிரச்சனை செய்துள்ளார். மனைவியை ஆத்திரத்தில் சரமாரியாக கத்தியால் குத்திய நிலையில், மகனையும் அழைத்துச் சென்று கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இந்த நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் விடியோவாக வெளியான நிலையில், காவல்துறையினர் சிறுவனை மீட்டு இருக்கின்றனர். தர்மராஜ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Crime news

சமூக வலைத்தளங்களில் விவாதம்:

இந்த விவகாரம் அனைத்தும் சிறுசிறு வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். சமீபகாலமாகவே ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கள்ளக்காதல் தொடர்பான விவகாரத்தில் கொலை அல்லது கொலை முயற்சி சம்பவங்கள் நடப்பது செய்திகளாகி வருகின்றன. இந்த விஷயமும் தற்போது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் வலம்வரும் ஒருசில வீடியோவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!