சர்வதேச அளவில் இந்தியர்களின் மானத்தை வாங்கிய இருவர்.! வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு களங்கம்.!



Two Indians Arrested For Diamond Theft In Singapore

சிங்கப்பூரில் உள்ள பிரபல நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் போல நடித்து சுமார் 1.49 கோடி ரூபாய் மதிப்பிலான வைரத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட இரு இந்தியர்கள், தப்பிச் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகவலின்படி, நகைகளை பார்ப்பது போல நடித்து கடை ஊழியரின் கவனத்தை திசைதிருப்பிய இருவரில் ஒருவர், விலை உயர்ந்த வைரத்தை எடுத்து வாயில் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் எந்த சந்தேகமும் வராத வகையில் கடையை விட்டு வெளியேறியுள்ளனர்.

Singapore

இதையடுத்து நகைக்கடை நிர்வாகம் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறைக்கு தகவல் அளித்தது. விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள், சிங்கப்பூரை விட்டு விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் விமான நிலையத்தில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட வைரமும் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கவரிங் கடையில் நகையை திருடி அசிங்கப்பட்ட திமுக புள்ளி! சிசிடிவி மூலம் அடையாளம்! பகீர் சம்பவம்!

இந்த சம்பவம் சிங்கப்பூரில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் இந்தியர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எனக்கு கேன்சர் ப்ளீஸ் உதவுங்க..மருத்துவ சிகிச்சைக்காக 71 லட்சத்தை அள்ளிக்கொடுத்த மக்கள்! இறுதியில் நடந்தது தான் பெரிய ட்விஸ்ட்....இளம்பெண் சொன்ன அந்த ஒரு வார்த்தையை கேட்டு ஆடிப்போன போலீஸ்!!!