பார்களில் மது விற்பனைக்கு தடை... தமிழக அரசு அதிரடி உத்தரவு.!



Tamil Nadu Govt Bans Liquor Sales Inside Bars

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மதுபான பார்கள் தொடர்பாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, மதுபான பார்களில் மது விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், பார்களில் நொறுக்குத் தீனிகள் மற்றும் பிற உணவுப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படும் நேரத்தில் மட்டுமே பார்களும் இயங்க வேண்டும் என்றும், அதற்கு வெளியே பார்களை திறந்து வைத்திருக்க அனுமதி இல்லை என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

tamil nadu

இந்த விதிமுறைகளை மீறும் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவையெனில் சம்பந்தப்பட்ட பார்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: அப்படி போடு.... அடி தூள்! 21 வயசுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது கிடையாது! முதல்வர் விஜய்யின் அடுத்தக்கட்ட அதிரடி உத்தரவு..!!!

இந்த புதிய உத்தரவு மூலம் பார்களில் நடைபெறும் விதிமீறல்களை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத மது விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: #BREAKING: யாருகிட்ட உங்க ஆட்டம்லா.... டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த புதிய உத்தரவு! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு...!!!