ஓரினசேர்கைக்கு வற்புறுத்திய 27 வயது இளைஞர் தலை துண்டித்து கொடூர கொலை.. தென்காசியில் பயங்கரம்.. 3 சிறார்கள் கைது.! 



Tenkasi Horror: 27-Year-Old Man Allegedly Beheaded, Three Minors Held for Murder

சிறார்கள் 27 வயதுடைய கூலித்தொழிலாளியை கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. 

மாயம்: 

Tamilnadu Crime:  தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், வலசை, பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் மகேந்திரன் (வயது 27). இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூலை 6ம் தேதி திடீரென மாயமான நிலையில், அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், மகேந்திரனின் மனைவி புவனேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.  

இதையும் படிங்க: காதல் ஜோடியிடம் காசு வாங்கி பஞ்சாயத்து? கொள்ளையனை அடித்தே கொன்ற நட்புகள்.. தர்மபுரியில் பயங்கரம்.!

ஊட்டி சுற்றுலா என தகவல்: 

அப்போது, மகேந்திரனின் நண்பர்கள் புவனேஸ்வரிக்கு தொடர்புகொண்டு மகேந்திரன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளதாகவும், அவருடன் தாங்களும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அவரை தேட வேண்டாம் எனவும் கூறிய நிலையில், அதனை நம்பிய புவனேஸ்வரி வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். சுமார் 10 நாட்கள் கடந்தும் கணவர் போனில் தொடர்பு கொள்ளவில்லை. 

Tenkasi

கொலை: 

இதனால் சந்தேகமடைந்த புவனேஸ்வரி 14ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, சேர்ந்தமரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவரின் இருசக்கர வாகனம் மேல கடையநல்லூர் - காசிதர்மம் செல்லும் சாலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், 3 சிறார்கள் உட்பட 4 பேர் சேர்ந்து மகேந்திரனை கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியதும் தெரியவந்தது. 

நடவடிக்கை: 

விசாரணைக்குப்பின் சிறார்கள் கொடுத்த தகவலின் பேரில் அதிகாரிகள் கத்திக்குத்து காயத்துடன் இருந்த மகேந்திரனின் உடலை மீட்டனர். அவரின் தலை காணவில்லை. அதனை தனியே எடுத்து புதைத்ததாக சிறார்கள் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில், தலை மீட்கப்பட்டது. 

Tenkasi

ஓரினசேர்கைக்கு வற்புறுத்தல் கொலை: 

அதாவது, மகேந்திரனுக்கு மேல கடையநல்லூர் பகுதியில் வசித்து வரும் சிறுவனுடன் மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று சிறுவனை மதுபானம் அருந்த அழைத்துச் சென்றவர், ஓரினசேர்கைக்கு வற்புறுத்தி இருக்கிறார். இதனால் சிறுவன் வேறொரு சிறுவனை உதவிக்கு அழைக்க, அங்கு சண்டை நடந்துள்ளது. பின் அவர் வேறொருவரை அழைக்க மொத்தமாக 3 சிறார்கள், ஒரு இளைஞர் என 4 பேர் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றனர் என்பது அம்பலமானது.  

இதையும் படிங்க: கொலையில் முடிந்த வாக்குவாதம்.. 6 நாட்களாக அழுகிக்கிடந்த சடலம்.. நெல்லையில் திடுக் சம்பவம்.!