கொலையில் முடிந்த வாக்குவாதம்.. 6 நாட்களாக அழுகிக்கிடந்த சடலம்.. நெல்லையில் திடுக் சம்பவம்.! 



Nellai Woman Murdered for 9 Sovereigns of Gold: Body Found After 6 Days

9 சவரன் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட கொடூரம் நெல்லையில் நடந்துள்ளது. 

உதவி செய்வார்: 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல், சிங்கம்பாறை பகுதியில் வசித்து வருபவர் ஆபேல் ராஜா. இவரின் மனைவி மரிய ஜெயா (வயது 41). ராஜா கோவையில் வேலை பார்த்து வருகிறார். ஜெயா மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்த நிலையில், வெளியூர்களுக்கு சென்று முதியவர்களுக்கும் உதவி வந்தார். 

இதையும் படிங்க: இன்ஸ்டா காதலை கைவிடாததால் ஆத்திரம்.. தங்கையை அடித்தே கொன்ற சகோதரன்..!

பெண் மாயம்: 

இதனிடையே, கடந்த ஜூலை 10ம் தேதி திருநெல்வேலி செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றவர் இரவிலும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதறிப்போன ராஜா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.  

நகைகள் மாயம்: 

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னதாக நெல்லை நகரம் கல்லணை மாநகராட்சி பள்ளியின் எதிர்புறம் உள்ள வீட்டில் துர்நாற்றம் வீசுகிறது என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற காவல்துறையினர், மரிய ஜெயாவின் சடலத்தை மீட்டனர். அவரின் 9 சவரன் தங்க நகைகளும் மாயமாகி இருப்பதை உறுதி செய்தனர். 

Crime news

கொலை உறுதி: 

உடல் பிரேத பரிசோதனைக்காக காத்திருந்த அதிகாரிகள், தலையில் அடித்துக்கொலை செய்யப்பட்ட தகவலை மருத்துவ பரிசோதனைக்குப்பின் உறுதி செய்தனர். இதனையடுத்து, கொலையாளியை கண்டறிய அதிகாரிகள் வலைவீசினர். விசாரணையில், மார்க்கெட்டிங் தொழிலுக்காக ஜெயா வீடு எடுத்து தங்கி இந்த இடத்துக்கு, தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 26) வந்து சென்றது தெரியவந்தது. 

வாக்குவாதம் கொலை: 

சம்பவத்தன்று ஜெயாவுக்கும் - சுரேஷ் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சுரேஷ் குமார் ஜெயாவின் தலையில் பலமாக தாக்கியதில் பெண் பலியாகி இருக்கிறார். பின் அவரின் நகைகளை சுரேஷ் பறித்துச் சென்றுள்ளார் என்பது அம்பலமானது. இதுகுறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது. 

இதையும் படிங்க: தினமும் குடி, அடி சித்ரவதை.. 18ல் திருமணம், 19ல் கர்ப்பிணி மனைவி கொலை.. திருப்பூரில் சோகம்.!