திடீர் திருப்பம்.... போயஸ் கார்டனுக்கு குடியேறப் போகும் முதல்வர் விஜய்... இதுதான் காரணமா? !!!
தமிழக அரசியலில் முக்கிய அடையாளமாக கருதப்படும் போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை முதலமைச்சர் விஜய் வாங்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அரசியல் வட்டாரத்திலும் திரையுலகிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
போயஸ் கார்டனுக்கு மாற திட்டமா?
தற்போது சென்னையின் நீலாங்கரையில் வசித்து வரும் முதலமைச்சர் விஜய், தலைமைச் செயலகத்திற்கு தினசரி பயணிக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, நகரின் மையப்பகுதியான போயஸ் கார்டனுக்கு குடியமர்வது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அதிகாரப்பூர்வ பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஷ்! மீண்டும் இணைந்தனர்.... முதல்வர் விஜய் - சங்கீதா விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி? விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!
தீபாவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நீண்டகால சட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து, வேதா நிலையத்தின் உரிமை அவரது அண்ணன் மகள் ஜெ. தீபாவிடம் உள்ளது. சுமார் ரூ.350 கோடி மதிப்புள்ளதாகக் கூறப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லத்தை வாங்குவது தொடர்பாக, விஜயின் குழுவினர் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பு
இந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால், விஜய் போயஸ் கார்டனில் குடியேறும் முதல் தற்போதைய முதலமைச்சராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தரப்பிலோ அல்லது ஜெ. தீபா தரப்பிலோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து வரும் ஆஃபர்.! பாஜகவும் களத்தில் இறங்கிட்டு... மாநிலம் தலைவர் பதவியா? திமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!!!