பாழடைந்த கட்டத்தில் 2 பள்ளிச் சிறுமிகளை கதற கதற... வெளியான அதிர்ச்சி வீடியோ..!!!



rajasthan-dausa-girls-abduction-video-investigation

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் பள்ளிச் சீருடை அணிந்த இரண்டு சிறுமிகள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வைரலான வீடியோ குறித்து விசாரணை

தகவலின்படி, பாழடைந்த கட்டடம் ஒன்றுக்கு இரண்டு சிறுமிகளை சிலர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பான தகவல் கிடைத்தவுடன் தௌசா காவல் கண்காணிப்பாளர் பியூஷ் தீட்சித் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சந்தேகத்திற்குரிய இருவரை அடையாளம் கண்டு அவர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் 4- வது பிளாட்பாரத்தில் கிடந்த மர்ம சூட்கேஸ்! திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! சென்னையில் நடந்த பயங்கரம்...!!!

பழைய சம்பவமா என்ற கோணத்திலும் ஆய்வு

இந்த வீடியோ பழைய சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இதையடுத்து, சம்பவம் எப்போது நடந்தது, ஏன் உடனடியாக புகார் பதிவு செய்யப்படவில்லை, வீடியோ பதிவு செய்த நபர் ஏன் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

வீடியோவை பகிர வேண்டாம் என எச்சரிக்கை

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளத்தை பாதுகாப்பது சட்டப்படி கட்டாயம் என்பதால், இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்று காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் பணிகளும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: இது பள்ளி அறையா? இல்லை படுக்கை அறையா? வகுப்பறையில் அத்துமீறிய 2 ஆசிரியர்கள்.... இணையத்தில் வைரலாகும் வீடியோவால் கொந்தளிப்பில் பெற்றோர்கள்.! கல்வித்துறையில் பரபரப்பு.!!!