பள்ளிப்பருவ காதலால் விபரீதம்.. கள்ளகாதலுக்காக கணவருக்கு மர்டர் ஸ்கெட்ச்.. தமிழக இளைஞருக்கு நேர்ந்த சோகம்.! 



Krishnagiri Man Murdered in Alleged Love Triangle; Wife and Lover Accused

மனைவியுடன் ஆசையாக கோயிலுக்குச் சென்ற கணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். 

தம்பதிகள்: 

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, தேவதாசனப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 35). ஆந்திரப்பிரதேசம் மாநிலம், சித்தூர் மாவட்டம், போயனப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் ஹாசினி (வயது 30). தம்பதிகளுக்கு ஒன்றரை வயதுடைய மௌனிகா என்ற மகள் இருக்கிறார். 

இதையும் படிங்க: சித்தி மகளுடன் கள்ளக்காதல்.. 20 வயது கல்லூரி மாணவி கொலை.. கணவனின் கொடூரம்.. திருவள்ளூரில் பயங்கரம்.!

கோயிலுக்குச் சென்றனர்: 

ஓசூரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ரமேஷ், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனிடையே, கடந்த 13ம் தேதி ஹாசினி, கணவர் ரமேஷ், குழந்தை மௌனிகா ஆகியோர் ஹாசினியின் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளனர். பின் ௧௪ம் தேதியன்று மல்லப்பா மலையில் இருக்கும் கோயிலுக்கு மூவரும் புறப்பட்டுச் சென்றனர்.

Crime news

வெட்டிக்கொலை: 

நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் வீடு திரும்பாததால் ஹாசினியின் தாய் ருக்கம்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, மலைக்கோயிலில் ரமேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டவாறு சடலமாக மீட்கப்பட்டார். 

காரணம் என்ன? 

அதாவது, ஹாசினியும் - போயனபள்ளி பகுதியைச் சேர்ந்த யுகேந்தரும் சிறுவயது முதல் பழகி வந்து காதலித்து வந்துள்ளனர். ரமேஷுடன் திருமணம் நடைபெற்று முடிந்தாலும் சிறுவயது காதலை இருவராலும் கைவிட முடியவில்லை. இந்த தகவலை அறிந்த ரமேஷ் மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு உண்டாகி இருக்கிறது. இதனால் கணவரை தீர்த்துக்கட்ட ஹாசினி கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டி கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.  

Crime news

வலைவீச்சு: 

இருசக்கர வாகனத்தில் சென்றபோது கைப்பையை தவறவிட்டது போல நடித்து, அங்கு மறைந்திருந்த யுகேந்தர் ரமேஷை வெட்டிக்கொலை செய்து இருக்கிறார். உடலை அப்படியே மலைப்பகுதியில் கீழே வீசிய இருவரும், ரயில் நிலையத்துக்குச் சென்று தப்பிச் சென்றுள்ளனர். காசினி தனது குழந்தையையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார் என்பது அம்பலமானது. கள்ளக்காதல் ஜோடி மற்றும் கொலைக்கு உதவி செய்தவர்கள் என 4 பேரையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க: கொலையில் முடிந்த வாக்குவாதம்.. 6 நாட்களாக அழுகிக்கிடந்த சடலம்.. நெல்லையில் திடுக் சம்பவம்.!