பிஸ்கட் சாப்பிடுவதில் அக்கா-தம்பி சண்டை.. பரிதாபமாக பறிபோன உயிர்.. திண்டுக்கல்லில் சோகம்.!



Teen Girl Dies by Suicide After Argument With Brother Over Biscuits in Dindigul

அக்கா-தம்பி சண்டையில், சிறுமி தற்கொலை செய்துகொண்ட சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 வயது சிறுமி:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், விருப்பாச்சி, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நகுலன். இவரின் மகள் ரிச்சியா (வயது 15). இவர் சத்திரப்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். 

இதையும் படிங்க: Namakkal: விஷப்பூச்சி கடித்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!

தாக்கிக்கொண்டனர்:

இதனிடையே, ரிச்சியா மற்றும் அவரது சகோதரர் ரித்திகன் இடையே பிஸ்கட் சாப்பிடுவதில் சம்பவத்தன்று சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஒருவரையொருவர் தங்களின் காலணிகளை சேதப்படுத்திக்கொண்டுள்ளனர்.

Dindigul

மரணம்:

இந்த சண்டையால் மனமுடைந்துபோன சிறுமி, சம்பவத்தன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன உறவினர்கள் சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியின் மரணம் உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த சத்திரப்பட்டி காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: செல்போன் பார்ப்பதில் அக்கா-தங்கைக்குள் சண்டை.. அரங்கேறிய விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர்.!