செல்போன் பார்ப்பதில் அக்கா-தங்கைக்குள் சண்டை.. அரங்கேறிய விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர்.!



in Salem 18 Year Old Girl Student Dies by Suicide

அக்கா-தங்கை இடையே ஏற்பட்ட தகராறில் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

அக்கா-தங்கை:

சேலம் மாவட்டத்தில் உள்ள சுக்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் வரதராஜ். இவரின் மகள்கள் திவ்யபாரதி (வயது 17), ரமணி (வயது 14). சிறுமிகள் இருவரும் சுக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

இதையும் படிங்க: "தப்பு பண்ணிட்டோம் தூக்குல தொங்கிடலாம்".. கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை.. இறுதியில் பறிபோன உயிர்.!

சண்டை:

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளனர். பின் மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, செல்போன் பார்ப்பதில் அக்கா-தங்கை இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

Salem

தற்கொலை:

இந்த சண்டையில் ஆத்திரமடைந்த திவ்யபாரதி, வீட்டில் இருக்கும் அறைக்குச் சென்று கம்பியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பறிபோன உயிர்:

ஆனால், சிறுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துள்ளார். மருத்துவர்கள் சோதனை செய்துவிட்டு மரணத்தை உறுதி செய்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், திவ்யபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பாஸ்புக்கை ஏண்டா தொலைச்ச? கண்டித்த தாய்.. விபரீத முடிவெடுத்த 17 வயது சிறுவன்..!