காதல் மோகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவருடன், திருமணமான ஆசிரியை செய்த கேவலமான செயல்! அதிர்ச்சியில் பெற்றோர்!

காதல் மோகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவருடன், திருமணமான ஆசிரியை செய்த கேவலமான செயல்! அதிர்ச்சியில் பெற்றோர்!


teacher eloped with 10 standard student

சேலம் மாவட்டம் திருவாகவுண்டனூரைச் சேர்ந்த 26 வயது நிறைந்த எம்.எஸ்.சி, பி.எட் பட்டதாரி பெண் ஒருவர் தனியார் டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் சேலம் மாவட்டம் பாகல்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கணவர் வேலை விஷயமாக  சென்னை சென்று விட்டதால், ஆசிரியை அவரது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையி  கடந்த சில தினங்களுக்கு முன் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று வருவதாக கூறி சென்ற ஆசிரியர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதனையடுத்து எங்கு தேடியும் தனது மகள் கிடைக்காததால், அவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் போலீசார்கள் வழக்குப்பதிவு செய்து  காணாமல் போன ஆசிரியையை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு அந்த ஆசிரியையும், அவருடன் 17 வயது மாணவனும் ஜோடியாக வந்துள்ளனர். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பட்டதாரி ஆசிரியைக்கும், அவர் பணி புரிந்த டுட்டோரியல் கல்லூரியில் பயின்ற 10 ஆம் வகுப்பு  மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது, ஆனால் ஆசிரியைக்கு திருமணம் நடந்துவிட்டதால்  அவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர் என தெரியவந்துள்ளது .

இதனையடுத்து போலீசார்  அவர்களுக்கு அறிவுரை கூறினர், ஆனால், அந்த ஆசிரியையும், மாணவனும் தாங்கள் ஒன்றாகத்தான் வாழ்வோம் என்று அடம் பிடித்துள்ளனர். பின்னர் ஒருவழியாக இருவரும் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.