திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு! அதிகாலை 4 மணி முதல் காத்திருக்கும் மதுபிரியர்கள்!



tasmac opened today in thiruvallur

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மே 7ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் மே 8ம் தேதி மாலை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன. இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, தமிழகத்தில் கடந்த 16ம் தேதி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இந்தநிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 76 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 126 மதுக்கடைகள் உள்ளன. அவற்றில் கடந்த முறை 40 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அப்போது எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடந்ததால் சில கடைகள் மூடப்பட்டன.

tasmac

இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 76 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, சோழவரம், திருத்தணி ஆகிய காவல் உட்கோட்டங்களில் 76 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. ஒவ்வொரு மதுக்கடைகளிலும் நாளொன்றுக்கு 1000 டோக்கன்கள் மட்டுமே வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, உள்ளூர் நபர்களுக்கு மட்டுமே மதுபானம் வாங்க டோக்கன் வழங்கப்படும். சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட மாட்டாது. கடைக்கு வரும் அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். மேலும் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கி செல்லவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், மதுக்கடையின் முன்பு மது வாங்க அதிகாலை 4 மணி முதலே மதுபிரியர்கள் மது வாங்க நிற்கின்றனர். கொரோனா சமயத்திலும் மதுவிற்காக காத்திருக்கின்றனர் குடிமகன்கள்.