காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
இருவர் மரணம், 31 பேர் டிஸ்சார்ஜ்.! புதிதாக 771 பேர் பாதிப்பு.! தமிழகத்தை சுற்றிவளைக்கும் கொரோனா..!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களா ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 500 கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்றுமட்டும் தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் மொத்த எண்ணிக்கை 4826 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் மட்டும் இன்று 324 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவுக்காக சிகிச்சை பெற்றுவந்த இரண்டு பேர் இன்று மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 31 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1516 ஆக அதிகரித்துள்ளது.