தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்.. ஆனால் இதற்கு மட்டும் அனுமதி.!

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்.. ஆனால் இதற்கு மட்டும் அனுமதி.!


tamil-nadu-govt-implement-complete-lockdown-today-due-t

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமானதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்க பட்டு வந்தது. இதனால் நாட்டின் பொருளாதார மிகவும் பாதிக்கப்பட்டு, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

அதனையடுத்து அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்தியது. இருப்பினும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும், முககவசம், சமூக இடைவெளி, கை சுகாதாரம் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியது. 

lockdown

தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி 3,32,105 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2,72,251 பேர் குணமடைந்து விட்டனர். 5,641 பேர் பலியாகியுள்ளனர். 54,213 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் 36.4 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சில நாட்களாக ஞாயிறு கிழமையில் மட்டும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இறைச்சி, காய்கறி மற்றும் மளிகை கடைகள் போன்றவற்றை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை. மருத்து மற்றும் பால் விற்பனையை மட்டும் செய்யலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது.