வலையில் சிக்கிய நல்ல பாம்பு..! பாம்பை காப்பாற்ற போராடிய இளைஞர்..! அதே பாம்பு கொத்தி உயிர் இழந்த சம்பவம்.!



snake-bite-man-who-tires-to-save-it

வலையில் சிக்கிக்கொண்டிருந்த நல்ல பாம்பு ஒன்றை இளைஞர் ஒருவர் காப்பாற்றும் முயற்சியில், அதே பாம்பு சீண்டி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அருகே உள்ள ஆரப்பாக்கம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். மளிகைக்கடை நடத்திவரும் ராஜசேகர், கடையின் அருகில் உள்ள வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த வலையில் நல்ல பாம்பு ஒன்று சிக்கியிருப்பதை பார்த்து அதற்கு உதவி செய்ய முயற்சித்துள்ளார்.

snake

இந்த முயற்சியில் பாம்பு அவரது கையில் பலமாக கொத்தியுள்ளது. இதில் விஷம் உடலில் ஏறி ராஜசேகர் மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலையே ராஜசேகர் விஷம் தலைக்கேறி உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.