திருச்சி மாவட்டத்தில் அதிர்ச்சி... விஷ வண்டுகள் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 25 பணியாளர்கள்.!shocking-in-trichy-district-25-workers-admitted-in-hosp

திருச்சி மாவட்டத்தில் விஷ வண்டு தாக்குதலால் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடிபட்ட இவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே உள்ள திண்ணகுளம் ஊராட்சியில் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 100 நாள் வேலையில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கிருந்த மரத்தில் இருந்து வந்த விஷ வண்டு பணியாளர்களை கடித்ததாக கூறப்படுகிறது.

tamilnaduஇந்த விஷ வண்டு தாக்குதலில் 16 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

tamilnaduமருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் 25 பணியாளர்களுக்கு  மருத்துவர் பாஸ்கரன் சுகாதார ஆய்வாளர் ஹரிராம் மற்றும் செவிலியர் வளர்மதி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விஷ வண்டு  தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.