சசிகலாவை சந்தித்த சீமான் இறுதியாக எடுத்த அதிரடி முடிவு! வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை.!



seeman talk about election


தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி என சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. 

இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று, சசிகலா சில முக்கிய நபர்களை சந்தித்தார். இயக்குனர் பாரதிராஜா, அமீர், சரத்குமார், சீமான் ஆகியோர் திடீரென்று சசிகலாவை சந்தித்து பேசியது பரபரப்பாக பேசப்பட்டது.

சசிகலாவை சந்தித்த சரத்குமார், பாரதிராஜா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர், ஆனால் சீமான் மட்டும் செய்தியாளர்களை சந்திக்காமல் இருந்தார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பல கோணங்களில் பேசப்பட்டது. இந்நிலையில், தற்போது அதற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், 234 வேட்பாளர்களின் பட்டியலை, ஒரே மேடையில் வரும் 7-ஆம் தேதி அறிவிக்க போவதாக சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். 234 தொகுதிகளில் 117 பெண் வேட்பாளர்கள்,117 ஆண் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.