தமிழகம்

புதுக்கோட்டையில் தனியார் பள்ளி வாகனம் மோதி விபத்து! காயங்களுடன் துடிதுடித்த குழந்தைகள்!

Summary:

school bus accident in pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சீனமங்கலம் தனியார் பள்ளி வாகனம் ஒன்று ஆலமரத்தில் மோதி 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில் காயமடைந்த குழந்தைகளை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாகுடி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இன்று மாலை பள்ளி முடிந்து 20 மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பழைய வேன் புறப்பட்டுள்ளது. அந்த வேன் சீனமங்கலம் கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி அருகில் உள்ள ஆலமரத்தில் மோதியுள்ளது. 

வேனில் பயணித்த பள்ளி குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். வேனில் பயணித்த 11 மாணவ, மாணவிகள் பலத்த காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் காயமடைந்த குழந்தைகளை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பலத்த காயமடைந்த நான்கு மாணவர்களை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


Advertisement