என்னை யாராலும் தடுக்க முடியாது.! நிச்சயம் வருவேன்.! சசிகலா பேசிய அடுத்த ஆடியோ.!

என்னை யாராலும் தடுக்க முடியாது.! நிச்சயம் வருவேன்.! சசிகலா பேசிய அடுத்த ஆடியோ.!


sasikala audio

சொந்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவையும், அமமுக-வையும் கட்சியில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்தார். 

இதனையடுத்து சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் சமீப காலமாக வெளியாகி அதிமுகவில் புதிய சலசலப்பை கிளப்பி வருகிறது.

sasikala

கடந்த இரண்டு வாரத்தில் இதுவரை சசிகலா பேசிய 40 ஆடியோ பேச்சுக்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது 41வது ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், " கட்சியை தலைமையேற்று வழி நடத்த நிச்சயம் வருவேன், இதுபோன்ற சூழலை நான் ஏற்கனவே பார்த்துள்ளேன். என்னை யாராலும் தடுக்க முடியாது. விரைவில் உங்களை சந்திப்பேன்" என்று சசிகலா தெரிவித்துள்ளார்.