ஒரு வீடியோவுக்கு ரூ.50ஆயிரம்.. சாமியாரின் லேப்டாப்பை திறந்ததும் அதிர்ச்சி.. விசாரணையில் வெளிவந்த பரபரப்பு தகவல்!



Samiyar harassment school girl in Salem

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜா (50). எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த இவர், சனீஸ்வரா என்ற பெயரில் பரிகார நிலையம் நடத்தி, மாந்திரீகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி சித்ரா. தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

கடந்த 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வசூல் செய்வதற்காக அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் விஜயராஜாவின் பரிகார நிலையத்துக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியிடம் நைசாக பேசிய விஜயராஜா, அவரது கன்னத்தை கிள்ளி சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து வெளியேறி, நடந்த சம்பவத்தை தனது தோழியிடம் தெரிவித்துள்ளார். அப்போது அந்த தோழியும் இதேபோன்ற அனுபவம் தனக்கும் ஏற்பட்டதாக கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் சம்பவத்தை தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள், விஜயராஜாவின் பரிகார நிலையத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பள்ளி மாணவிகளின் சீருடைகள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த லேப்டாப்பை ஆய்வு செய்தபோது பெண்கள் மற்றும் சிறுமிகள் தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தவெக கொடி நிறத்தில் அரசு பேருந்துகள்? சேலத்தில் புதிய பேருந்துகளால் சர்ச்சை!

Salem

இதையடுத்து விஜயராஜாவின் எலக்ட்ரிக்கல்ஸ் கடையை சிலர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அப்பகுதியில் இருந்த விஜயராஜாவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாழப்பாடி போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரது வீடு மற்றும் பரிகார நிலையத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப், செல்போன் உள்ளிட்ட சாதனங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், விஜயராஜாவின் செல்போனில் பெண் ஒருவரின் ஆபாச வீடியோ இருந்ததாகவும், அதைக் காட்டி பள்ளி மாணவிகளிடம் பணம் தருவதாகக் கூறி வீடியோ எடுக்க முயன்றதாகவும் போலீஸ் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட இணையதளத்துக்கு ஆபாச வீடியோ அனுப்பியதாக விஜயராஜா தெரிவித்ததாகவும் கூறப்படும் நிலையில், அந்த சமூக வலைதள முகவரி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயராஜா வேறு பெண்கள் அல்லது சிறுமிகளின் வீடியோக்களை பதிவு செய்தாரா, அவற்றை வேறு நபர்களுக்கு அனுப்பியுள்ளாரா, வீடியோக்களை பயன்படுத்தி யாரையும் மிரட்டினாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற இளைஞர்கள் கைது!