பழைய பதிவால் புதிதாக வெடித்த வெடிகுண்டு! விஜய் சேதுபதியின் மறைமுக பேச்சால் கடும் எதிர்ப்பு..!!!
விஜய் சேதுபதிக்கு இப்போ கட்டம் சரியில்லை.. தவெக எம்எல்ஏ கனிமொழியி பரபரப்பு கருத்து!
நடிகர் விஜய் சேதுபதியின் சமீபத்திய பேச்சுகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கருத்துகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கனிமொழி எம்.எல்.ஏ. விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய கனிமொழி எம்.எல்.ஏ., விஜய் சேதுபதியின் சில பேச்சுகள் மறைமுகமாக அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், குறிப்பிட்ட அரசியல் கட்சியிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர் பேசுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், விஜய் சேதுபதியின் ஜாதகம் தொடர்பாகவும் கனிமொழி கருத்து தெரிவித்தார். கடந்த காலத்தில் ‘மகாராஜா’ திரைப்படம் வெளியாகும் முன்பு, அவரது ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு படம் வெற்றி பெறும் என தான் கணித்ததாகவும், அந்த கணிப்பு நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி சர்ச்சைப் பேச்சு விவகாரம்.. சீமான் திடீர் ஆதரவு! என்ன சொன்னார் தெரியுமா?
தற்போது விஜய் சேதுபதியின் ஜாதகத்தில் கட்டம் சரியில்லை எனக் கூறிய கனிமொழி, இந்த சூழலில் அவர் சில விஷயங்களை பேசும்போது கவனமாக இருப்பது நல்லது என்ற தொனியிலும் கருத்து தெரிவித்தார். நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சை அரசியல் ரீதியாக விமர்சித்ததுடன், அவரது ஜாதகம் குறித்தும் கனிமொழி எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க வேண்டும்! விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை விடுத்த தவெக எம்.எல்.ஏ!