டைவர்ஸ் வாங்கின கையோடு.. வீட்டை விட்டு வெளியேறிய நிலா.! அய்யனார் துணை குடும்பம் அதிர்ச்சி.!
தொடரும் ரூட்டு பிரச்சினை.! அரைநிர்வாண கோலத்தில் மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்!!
சென்னையில் மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் மோதல்கள் சினிமாவை போல திகழ்ந்துவருகிறது. நேற்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்களில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு தரப்பு மாணவர்கள், ஒரே பேருந்தில் கோயம்பேடு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினரிடையே யார் ரூட்டு தல என்று வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியது. ஒருகட்டத்தில் ஒரு தரப்பு மாணவர்கள் மறைத்துவைத்திருந்த அரிவாள், பட்டாகத்தி ஆகிய ஆயுதங்களை எடுத்து மற்றொரு தரப்பினரை தாக்க ஆரம்பித்தனர்.
Pachaiyappa, pachaiyappa
— Zakka Jacob (@Zakka_Jacob) 23 July 2019
Indha Ulagam Pachaiyappa pic.twitter.com/H7MG0KVjQB
அங்கு நடந்த தாக்குதலில், பச்சையப்பன் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் வசந்த் என்பவர் உட்பட 7 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.
அங்கு நடந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட சில மாணவர்களை கைது செய்தனர். இந்த மோதலில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிகொண்டிருக்கும் வசந்தகுமார் என்னும் மாணவரை மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த வீடியோ மூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த தாக்குதலின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பே கல்லூரி மாணவரை அரை நிர்வாண கோலத்தில் தாக்கிய மற்றொரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அந்த மாணவரை அரைநிர்வாண கோலத்தில் அமரவைத்து 53 ரூட்டுக்கு ஜே என்று 108 முறை எழுதச்சொல்லி சிலர் மிரட்டி தாக்குகின்றனர். அவரும் பயந்து அவர்கள் கூறுவதுபோல சத்தமாக கூறிக்கொண்டே எழுதுகிறார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.