மேடையிலே ராஷ்மிகாவிடம் அத்துமீறிய ஷாஹித் கபூர்! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்.... வைரலாகும் வீடியோ..!!!
பாலிவுட்டில் வெளியாக இருக்கும் ‘காக்டெய்ல் 2’ படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி தற்போது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இடையே நடந்த ஒரு தருணம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நிகழ்ச்சியில் எடுத்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஷாஹித் கபூரின் நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஹோமி அதாஜானியா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காக்டெய்ல் 2’ படத்தில் ஷாஹித் கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் கீர்த்தி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
புகைப்பட போஸின் போது ஏற்பட்ட சர்ச்சை
நிகழ்ச்சியில் கீர்த்தி சனோனின் அழகைப் பற்றி ராஷ்மிகா ஜாலியாக பேசி கொண்டிருந்தார். அதன்பின் புகைப்படக்காரர்களுக்காக அனைவரும் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது, ஷாஹித் கபூர் ராஷ்மிகாவின் பின்னால் வந்து அவரது இடுப்பில் கை வைத்ததாக வீடியோவில் தெரிகிறது.
இதையும் படிங்க: தவெக தொண்டர்களின் மாஸ் என்ட்ரி! திமுக நிகழ்ச்சியில் TVK பாடல்... ஆளுங்கட்சி முன்னாடியே த.வெ.க வின் சேட்டை! பயமே இல்லாத பசங்க! வைரல் வீடியோ!
இதையடுத்து சற்றும் எதிர்பாராத ராஷ்மிகா உடனடியாக அதிர்ச்சி அடைந்தார். சில நொடிகளிலேயே ஷாஹித் கபூரின் கையை வேகமாக தட்டிவிட்டு விலகினார். அங்கு இருந்தவர்களும் சில நொடிகள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
வைரலான வீடியோ.. நெட்டிசன்கள் எதிர்ப்பு
இந்த வீடியோ தற்போது X, Instagram உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. “பொது மேடையில் இப்படியா நடந்து கொள்வது?” என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக ஷாஹித் கபூர் மீது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
சிலர் இது சாதாரண தருணம் என்றும், மற்றொருபக்கம் ராஷ்மிகாவின் முகபாவனையே அவரின் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
படத்தை விட சர்ச்சை பேசுபொருள்
வரும் ஜூன் 19, 2026 அன்று ‘காக்டெய்ல் 2’ திரைப்படம் வெளியாக உள்ளது. ஆனால் படத்தின் கதையை விட, இந்த நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்தான் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.