#BREAKING: ஆற்றில் குதித்து உயிரிழந்த திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான கே. ராஜன் காலமானார்..! திரையுலகமே அதிர்ச்சியில்.....!!!



producer-k-rajan-suicide-adyar-river-chennai

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான 85 வயதான கே.ராஜன், சென்னை அடையாறு ஆற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அவர் திடீரென இவ்வாறு உயிரிழந்தது ரசிகர்களையும் சினிமா வட்டாரத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதன்பின் அடையாறு ஆற்றில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், கே.ராஜன் உடலை மீட்டனர்.

இதையும் படிங்க: காட்டுக்குள் மலம் கழிக்க சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி! உடல் துண்டு துண்டாகக் வெட்டப்பட்ட நிலையில் ..... தூத்துக்குடி அருகே நடந்த கொடூரம்!!!

தீயணைப்புத் துறையினர் தீவிர தேடுதல்

ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட அவரது உடல் பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் நடந்த பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

திரைப்பட நிகழ்ச்சிகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளில் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதற்காக அறியப்பட்ட கே.ராஜன், எப்போதும் துணிச்சலான பேச்சால் கவனம் ஈர்த்து வந்தவர். இந்நிலையில் அவரது மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

தற்கொலைக்கான காரணம் என்ன?

தற்போது வரை அவர் இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. குடும்பத்தினரிடமும் நெருங்கியவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து, தற்கொலையின் பின்னணி மற்றும் அதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறது.

 

இதையும் படிங்க: சிவகங்கையில் ஆடு மேய்க்கச் சென்ற 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! மாலையில் ஆடுகள் மட்டும் திரும்பிய நிலையில்.... மாணவியை தேடிய பெற்றோர்கள்! ஊருணித் தண்ணீரில் கண்ட அதிர்ச்சி...!!!